

மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருட தொடக்கத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டியாகும். இந்த போட்டியில் இன்று நடைபெற்ற ஒற்றையர் மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை சுவாரேஸ் நவரோ மற்றும் எஸ்தோனியா நாட்டின் ஆனெட் கொண்டாவெய்ட் ஆகியோர் விளையாடினர்.
முதல் செட்டை கைப்பற்றிய 22 வயது நிறைந்த கொண்டாவெய்ட் அடுத்த செட்டில் 4-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார்.
இந்த நிலையில், கொண்டாவெய்ட் 2 முறை செய்த தவறால் 29 வயது நிறைந்த நவரோ 2வது செட்டை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து 3வது செட்டையும் அவர் கைப்பற்றினார். இதனால் 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு நவரோ தகுதி பெற்றுள்ளார்.
#AustralianOpen #melbourne