சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட கேஸ்பர் ரூட்


சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட கேஸ்பர் ரூட்
x

கோப்புப்படம்

நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவல் செருந்தோலோ உடன் மோதினார்.

சுவிஸ்,

சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டு ஆடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவல் செருந்தோலோ உடன் மோதினார்.

இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேஸ்பர் ரூட், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story