சுவிஸ் ஓபன் டென்னிஸ்: பிரான்சிஸ்கோ கொமேசானா காலிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பிரான்சிஸ்கோ கொமேசானா, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோத உள்ளார்.
சுவிஸ்,
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டு ஆடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ கொமேசானா, ஸ்பெயினின் ராபர்டோ கார்பலேஸ் பேனா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்சிஸ்கோ கொமேசானா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ராபர்டோ கார்பலேஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பிரான்சிஸ்கோ கொமேசானா, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோத உள்ளார்.
Related Tags :
Next Story






