சுவிஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட இந்திய ஜோடி

கோப்புப்படம்
சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.
ஜிஸ்டாட்,
சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'இந்தியாவின் அர்ஜூன் காதே - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஹென்ரிக் ஜெபன்ஸ் (ஜெர்மனி) - அல்பானோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி யை எதிர்கொண்டது..
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் காதே - விஜய் சுந்தர் பிரசாந்த் இணை 5-7, 5-7 என்ற நேர் செட்டில் ஹென்ரிக் ஜெபன்ஸ் (ஜெர்மனி) - அல்பானோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடியிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
Related Tags :
Next Story






