சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜுவான் மானுவல் - பப்ளிக் இன்று மோதல்

கோப்புப்படம்
சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.
ஜிஸ்டாட்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் பப்ளிக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஆர்தர் காசாக்ஸையும், ஜுவான் மானுவல் செருண்டோலோ 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இக்னாசியோ பஸ்ஸையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கு இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் ஜுவான் மானுவல் - பப்ளிக் ஆகியோர் மோத உள்ளனர். இருவரும் சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையா போராடுவர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Related Tags :
Next Story






