டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி அளித்த சின்னர்!

சின்னர் தனது அடுத்த ஆட்டத்தில் ஹோல்கர் ரூன் உடன் மோத உள்ளார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துரின்,

தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

'கிரீன்' பிரிவில் இடம் பெற்றுள்ள 'நம்பர் ஒன்' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச்சுக்கு கடும் சவால் அளித்த சின்னர் போராடி வெற்றி பெற்றார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றியதால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. 3-வது செட்டை சின்னர் கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் சின்னர் 7-5, 6-7 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதில் 3-செட்டுகளுமே டை-பிரேக்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் தனது அடுத்த ஆட்டத்தில் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் விளையாட உள்ளார். சின்னர் தனது அடுத்த ஆட்டத்தில் ஹோல்கர் ரூன் உடன் மோத உள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com