டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நம்பர் 1 வீரர் ஜோகோவிச் சாம்பியன்!

டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோகோவிச் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துரின்,

தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்றிருந்த வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் 'கிரீன்' பிரிவில் ஜோகோவிச் மற்றும் சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 'ரெட்' பிரிவில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் டேனியல் மேத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

அதன்படி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். தரவரிசையில் நம்பர் 1 வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் சின்னர் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோகோவிச் 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் இந்த பட்டத்தை வெல்வது இது 7-வது முறையாகும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com