ஊக்கமருந்து பயன்படுத்திய வழக்கு: இளம் டென்னிஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை


ஊக்கமருந்து பயன்படுத்திய வழக்கு: இளம் டென்னிஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை
x

கஜகஸ்தானை சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் அர்ஸ்லென்பக் அட்குலொவ்

லண்டன்,

கஜகஸ்தானை சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் அர்ஸ்லென்பக் அட்குலொவ் (வயது 21). இவர் சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 2023ம் ஆண்டு 1,250வது இடம் பிடித்தார்.

இதனிடையே, 2024ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் அர்ஸ்லென்பக் பங்கேற்றார். இந்த தொடரின்போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அர்ஸ்லென்பக் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து, அவர் டென்னிஸ் விளையாட தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும், ஊக்கமருந்து அயன்பாடு தொடர்பாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் அர்ஸ்லென்பக் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து, அர்ஸ்லென்பக் 4 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதித்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது. அர்ஸ்லென்பக் டென்னிஸ் விளையாட ஏற்கனவே ஓராண்டுக்குமேல் தடை உள்ள நிலையில் அவர் 2028 மார்ச் வரை டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story