டென்னிஸ் தரவரிசை: டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த அனிசிமோவா


டென்னிஸ் தரவரிசை: டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த அனிசிமோவா
x

Image Courtesy: X (Twitter) / File Image

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்தது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர். விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவா 5 இடம் முன்னேறி சிறந்த தரநிலையாக 7-வது இடம் பிடித்துள்ளார்.

1 More update

Next Story