டென்னிஸ் தரவரிசை: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் முதலிடத்தில் நீடிப்பு

கோப்புப்படம்
டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
நியூயார்க்,
ெடன்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 3 மாத காலம் தடையை அனுபவித்து வரும் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவும், 3-வது இடத்தில் ஸ்பெயினின் அல்காரசும் உள்ளனர். முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் 7-வது இடத்தில் தொடருகிறார். துபாய் ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ் (கிரீஸ்) இரு இடம் உயர்ந்து அவர் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஒரு இடம் உயர்ந்து 21-வது இடத்திலும், யுகி பாம்ப்ரி 5 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெரிய அளவில் மாற்றமில்லை. பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், போலந்தின் ஸ்வியாடெக் 2-வது இடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.






