

டொரொன்டோ,
அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாதனை படைத்து 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் காயத்தால் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
செரீனா வில்லியம்ஸ் காயத்தால் வெளியேறியது பற்றி கூறும் போது, மன்னிக்கவும், இன்று என்னால் வெற்றி பெற முடியவில்லை. நான் முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை, இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால் நாங்கள் தொடர்ந்து செல்வோம்."என்று கண்ணீருடன் சிரமப்பட்டு கூறினார் வில்லியம்ஸ்.