இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவுதான் - ரபெல் நடால்

பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிசில் ரபெல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில்  நடாலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ரபெல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கெள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ரபெல் நடால் இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் அவர் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நடால் கூறியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியதாவது,

முந்தைய போட்டிகளை விட இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று உணர்ந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஒரு கடினமான எதிரி இருந்தார். அவர் நன்றாக விளையாடினார். உங்கள் முன் நான் விளையாடிய கடைசி பிரெஞ்சு ஓபன் இதுவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

இன்று என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். மேலும் எனக்கு நிறைய விளையாடுவது மற்றும் எனது குடும்பத்துடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com