

முதல் தடையை சுமித் நாகல் வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவுடன் (ரஷியா) மோத வேண்டி வரலாம். கோல்டன்ஸ்லாம் கனவுடன் வந்துள்ள நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதல் சுற்றில் பொலிவியா வீரர் ஹூகோ டெலியனுடன் மோதுகிறார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி தங்களது முதல் சுற்றில் உக்ரைன் இரட்டை சகோதரிகளான நாடியா கிச்னோக் -லுட்மைலா கிச்னோக் இணையை எதிர்கொள்கிறார்கள்.