யுனைடெட் கோப்பை டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்..!

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

பெர்த்,

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தனது நாடான செர்பிய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.

இதில் இன்று நடைபெற்ற போட்டியில் செர்பியா மற்றும் செக்குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீராங்கனை ஒல்கா டேனிலோவிக் தோல்வியடைந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவிலான ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

இதனால் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜோகோவிச் - ஜிரி லெஹெக்கா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-1, 6-7 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று செக்குடியரசுக்கு எதிரான இந்த போட்டியை செர்பியா சமன் செய்ய உதவினார். இதன் மூலம் செர்பிய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com