அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

2வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , லாஸ்லோ டிஜெரை எதிர்கொண்டார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், சக வீரரான லாஸ்லோ டிஜெரை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். அப்போது லாஸ்லோ டிஜெருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் ஜோகோவிச் அடுத்தசுற்றுக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com