அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

ஜோகோவிச் 2-வது சுற்றில் ஜகாரி ஸ்வஜ்டா உடன் மோதினார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், ஜகாரி ஸ்வஜ்டா (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், அடுத்த 3 செட்டுகளை வரிசையாக கைப்பற்றி வெற்றி பெற்றார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-7, 6-3, 6-3 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 3-வது சுற்றில் கேமரூன் நோரி உடன் மோதுகிறார்.


1 More update

Next Story