அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?
x

image courtesy:twitter/@usopen

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ் மகுடம் சூடினார்.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சினெரை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடினார். சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.44 கோடியும், 2-வது இடம் பிடித்த சினெருக்கு ரூ.22 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அனிசிமோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். மகுடம் சூடிய அரினா சபலென்கா ரூ.44 கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த அனிசிமோவாவுக்கு ரூ.22 கோடி பரிசாக கிட்டியது.

1 More update

Next Story