அமெரிக்க ஓபன்: துனிசிய வீராங்கனை ஜாபியர் விலகல்

துனிசியா நாட்டை சேர்ந்த ஆன்ஸ் ஜாபியர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Image : AFP 
Image : AFP 
Published on

நியூயார்க்,

4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று அமெரிக்க ஓபன் தொடராகும். ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் (யு.எஸ். ஓபன்) டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், துனிசியா நாட்டை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஜாபியர் தகவல் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com