வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பிரான்வின் கோரெண்டின் மவுடெட் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கோரெண்டின் மவுடெட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட கோரெண்டின் மவுடெட் தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story