வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்ஸ் டி மினார்


வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்ஸ் டி மினார்
x

Image Courtesy: @mubadalacitidc

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஸ்பெயினின் டேவிடோச் உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த டி மினார், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக 2வது மற்றும் 3வது செட்டை 6-1, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய டி மினார், டேவிடோச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

1 More update

Next Story