வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @mubadalacitidc
Image Courtesy: @mubadalacitidc
Published on

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியின் சைமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலியின் சைமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com