விம்பிள்டன் நாயகன்... 'ஜனநாயகன்' விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் - வைரல் புகைப்படம்


விம்பிள்டன் நாயகன்... ஜனநாயகன் விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் - வைரல் புகைப்படம்
x

image courtesy: Wimbledon

தினத்தந்தி 14 July 2025 9:45 AM IST (Updated: 14 July 2025 9:45 AM IST)
t-max-icont-min-icon

விம்பிள்டன் நாயகன்' என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதனையடுத்து விம்பிள்டனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், விம்பிள்டன் நாயகன்' என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் விஜய் மக்களிடம் செல்பி எடுப்பது போன்ற போஸ்டரை ரெபரென்ஸாக பயன்படுத்தி இந்த போஸ்டரை விம்பிள்டன் வடிவமைத்துள்ளது. இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

1 More update

Next Story