விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அல்காரஸ்

Image Courtacy: WimbledonTwitter
கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜெர்மனியின் ஜான்-லெனார்ட்ஸ்ட்ரப் உடன் மோதினார்.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆன்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜெர்மனியின் ஜான்-லெனார்ட்ஸ்ட்ரப் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜான்-லெனார்ட்ஸ்ட்ரப்பை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ஜான்-லெனார்ட்ஸ்ட்ரப் தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story