விம்பிள்டன் டென்னிஸ்: அமண்டா அனிசிமோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா உடன் மோதினார்.

இந்த போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமண்டா அனிசிமோவா 6-1, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com