விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
image courtesy:twitter/@rolandgarros
image courtesy:twitter/@rolandgarros
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), பிரிட்டனின் டேன் எவான்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எவான்ஸை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட எவான்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com