விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வந்தது.

மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் வெரோனிகா குடராமெட்ரோவா - பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ - தைவானின் சு-வெய் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய குடராமெட்ரோவா ஜோடி 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com