விம்பிள்டன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ,அமெரிக்கா வீராங்கனை எமா நவரோ உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

லண்டன்,

லண்டன், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ,அமெரிக்கா வீராங்கனை எமா நவரோ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-2,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com