விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

அரினா சபலென்கா (பெலாரஸ்), பெல்ஜியத்தின் எல்லிஸ் மெர்டேன்ஸ் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), பெல்ஜியத்தின் எல்லிஸ் மெர்டேன்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் எல்லிஸ் மெர்டேன்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com