விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்

இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் ,செர்பியா வீரர் மியோமிர் ஆகியோர் மோதினர்.
Image : AFP 
Image : AFP 
Published on

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் ,செர்பியா வீரர் மியோமிர் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-1,6-4,6-2 என்ற செட் கணக்கில் மியோமிரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com