விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்கா-பிரிட்டன் ஜோடி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்கா-பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
image tweeted by @Wimbledon
image tweeted by @Wimbledon
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை டெசிரே க்ராவ்சிக் மற்றும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ எப்டன் மற்றும் சாம் ஸ்டோசர் ஜோடியை எதிர் கொண்டது.

மொத்தம் ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் க்ராவ்சிக்- ஸ்குப்ஸ்கி ஜோடி வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்த போட்டியில் அமெரிக்கா வீராங்கனை டெசிரே க்ராவ்சிக்வும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கியும் வேறு வேறு ஜோடிகளுடன் கலந்து கொள்ள இருந்த நிலையில், திடீர் மாற்றமாக கடைசி நிமிடத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து இறுதி போட்டியை எதிர்கொண்டனர். இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அவர்கள் தட்டிச் சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com