பெற்றோர், பயிற்சி குழுவினர் முன்னிலையில் கோப்பையை வென்றது மிகவும் அற்புதமானது - ஜானிக் சின்னர்


பெற்றோர், பயிற்சி குழுவினர் முன்னிலையில் கோப்பையை வென்றது மிகவும் அற்புதமானது - ஜானிக் சின்னர்
x

Image Courtesy: @Wimbledon

தினத்தந்தி 15 July 2025 7:30 AM IST (Updated: 15 July 2025 7:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் அல்காரஸை வீழ்த்தி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை உச்சிமுகர்ந்த முதல் இத்தாலி நாட்டுக்காரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பாரீசில் நடந்த பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்வி மிகவும் கடினமாக இருந்தது. இது போன்ற முக்கியமான தொடர்களில் வெற்றியோ தோல்வியோ பெரிய விஷயம் அல்ல. அதில் என்ன தவறு செய்தோம், அதை எப்படி சரி செய்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நானும் பிரெஞ்சு ஓபன் தோல்வியை ஏற்றுக் கொண்டு இன்னும் கடினமாக உழைத்தேன். அதற்குரிய பலன் தான் இப்போது இங்கு விம்பிள்டன் கோப்பையுடன் நிற்கிறேன்.

வெற்றிக்களிப்பில் ஆனந்த கண்ணீர் வராவிட்டாலும் கூட இது எனக்கு மிகவும் உணர்வு பூர்வமான தருணமாகும். ஏனெனில் எனது பெற்றோர், சகோதரர், பயிற்சி குழுவினர் முன்னிலையில் கோப்பையை வென்றது மிகவும் அற்புதமானது. எனது சகோதரருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த வாரம் பார்முலா1 கார்பந்தயம் இல்லாததால் இந்த போட்டியை பார்க்க வந்திருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story