பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்திய கின்வென் ஜெங்

Image Courtesy : AFP
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
ரியாத்,
உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட கின்வென் ஜெங் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story






