பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
Published on

ரியாத்,

முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது . இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபி கிராப், செரீனா வில்லியம்ஸ் என்ற பெயரில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் (செரீனா பிரிவு) விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 6-3, 1-6,0-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com