

சிங்கப்பூர்,
டாப்8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஒயிட் பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 63, 61 என்ற நேர் செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) பதம் பார்த்தார். இருப்பினும் ஆஸ்டாபென்கோவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 75, 64 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவை சாய்த்தார். இந்த பிரிவில் பிளிஸ்கோவா, வீனஸ் வில்லியம்ஸ் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தனர். ஆஸ்டாபென்கோ, முகுருஜா தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் வெளியேறினர்.
ரெட் பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) கரோலின் கார்சியா (பிரான்ஸ்), சிமோனா ஹாலெப் (ருமேனியா) எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் மோதுகிறார்கள்.