

சிட்னி,
டோரண்டோவில் நடந்து வரும் கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக 2-வது சுற்று ஆட்டத்தில் களம் கண்ட ஆஷ்லி பார்டி 7-6 (7-5), 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் ஆஷ்லி பார்டியின் நம்பர் ஒன் மகுடம் பறிபோகிறது.
இதேபோட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அல்லது செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரில் ஒருவர் நம்பர் ஒன் அரியணையை அலங்கரிக்க உள்ளனர். புதிய தரவரிசை அடுத்த வாரத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.