உலக டென்னிஸ் போட்டி: அரைஇறுதியில் டிமிட்ரோவ், பெடரர்

அரைஇறுதிக்கு முன்னேறிய டிமிட்ரோவ், பெடரர்: உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
உலக டென்னிஸ் போட்டி: அரைஇறுதியில் டிமிட்ரோவ், பெடரர்
Published on

லண்டன்,

ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். இதில் பீட் சாம்ப்ராஸ் அணி பிரிவில் அங்கம் வகிக்கும் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) நேற்று நடந்த ஆட்டத்தில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார். 2-வது வெற்றியை சுவைத்த டிமிட்ரோவ் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு போரிஸ் பெக்கர் அணி பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்,சர்லாந்து) 7-6 (6), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் அரைஇறுதியை உறுதி செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com