டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவிப்பு

டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார்.
டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவிப்பு
Published on

ஒடேன்சி,

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான டெமார்ன்கின் கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த மாதம் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். 29 வயதான வோஸ்னியாக்கி இதுவரை 30 பட்டங்கள் கைப்பற்றியுள்ளார். இதில் 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதும் அடங்கும். ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று உணர்ந்ததால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய வோஸ்னியாக்கி, இல்வாழ்க்கையில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். அடிக்கடி காயத்தால் அவதிப்படும் வோஸ்னியாக்கி இந்த ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை.

தரவரிசையில் ஆண்டின் தொடக்கத்தில் 3-வது இடத்தில் இருந்த வோஸ்னியாக்கி தற்போது 37-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com