ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாமியன் பட்டம் வென்றார். #AustralianOpen #CarolineWozniacki #Halep
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்
Published on

மெல்போர்ன்,

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது.

பெண்கள் பிரிவில் இன்று நடந்த சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் நட்சத்திரம் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 2-ம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும் (டென்மார்க்) மல்லுகட்டினர். இதற்கு முன்பு இருவரும் சந்தித்த 6 ஆட்டங்களில 4-ல் வோஸ்னியாக்கியும், 2-ல் ஹாலெப்பும் வெற்றி பெற்று இருந்தனர். இதில் யார் வென்றாலும் அவர்களுக்கு அது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும் என்ற நிலையில் ஆட்டம் மிகவும் பரபரப்புடன் தொடங்கியது. இருவரும் காயத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி படுத்தினர்.

முதல் செட்டிலே இருவருக்கும் இடையே ஆட்டம் அணல் பறந்தது. நீயா, நானா என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது முதலே இருவர் இடையேயும் கடும் போட்டி நிலவியது. 7-6 (2) என்ற கணக்கில் செட்டை கரோலின் வேஸ்னியாக்கி தனதாக்கினார். இதனையடுத்து இரண்டாவது ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இரண்டாவது செட்டை சிமோனா 3-6 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். இருவருக்கும் முக்கியமான போட்டி என்பதால் முன்றாவது செட் ஆட்டம் மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்பட்டது. காலில் காயம் காரணமாக கரோலின் அவதிப்பட்டதால் ஆட்டம் தாமதமானது, இதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று குழப்பம் மற்றும் சோர்வு காணப்பட்டாலும் ஆட்டத்தில் இல்லை.

கரோலின் 2-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்ததை அப்படியே முன்நகர்த்தி சென்று 6-4 என்ற கணக்கில் செட்டை தனதாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.

கரோலின் வோஸ்னியாக்கி வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கரோலின் வோஸ்னியாக்கி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மட்டும் தன்வசப்படுத்த வில்லை, சிமோனாவிடம் இருந்து உலக தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பறித்துக்கொண்டார். போட்டியில் சிமோனாவின் ஆட்டமும் சிறப்பாக அமைந்தது. பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா மற்றும் ரஷியாவின் மரியா சரப்போவா ஆதிக்கம் செலுத்தாத நிலையில் சிமோனா ஹாலெப் பட்டத்தை சொந்தமாக்குவார் என டென்னிஸ் விளையாட்டுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். ஹாலெப்பும் ஒருநாள் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார் என அவரையும் பாராட்டி வருகின்றனர்.

இரண்டாவது இடம் பிடித்த சிமோனா ஹாலெப் பேசுகையில், கரோலினாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அவருடைய எதிர்க்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்து, என குறிப்பிட்டார்.

இது எனக்கு மிகவும் சிறப்பான போட்டியாகும், என்னுடைய குதிகால் காயம் காரணமாக சிறப்பான ஆட்டத்தை நான் இன்று தொடங்கவில்லை, ஆனால் என்னால் முடிந்தவரையில் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முயற்சி செய்தேன், என்றார். நான் வருத்தம் அடையலாம் ஆனால் கரோலினா என்னைவிட சிறப்பாக விளையாடினார். இதேபோன்ற மற்றொரு சவாலான ஆட்டத்தை எதிர்க்கொள்வேன் எனவும் குறிப்பிட்டர் சிமோனா ஹாலெப். கரோலினா பேசுகையில் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது, இது சிறப்பான ஆட்டம், சிமோனாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும், நான் வெற்றி பெற்றதற்கு மன்னிப்பு கேட்கிறேன். நாம் இதுபோன்று வருங்காலங்களில் அதிகமான போட்டிகளை விளையாடுவோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com