வுஹான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட இகா ஸ்வியாடெக்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - இத்தாலியின் ஜாஸ்மின் பலோனி உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 1-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பலோனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com