நியூயார்க்,
நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி (ஆகஸ்டு 24-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை) நடக்குமா? என்று இப்போது என்னிடம் கேட்டால் வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வேன் என்று 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி நியூயார்க். அடுத்த சில மாதங்களில் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அமெரிக்க ஓபனின் தலைவிதி அமையும் என்றும் குறிப்பிட்டார்.