ஸ்ரீரெட்டியும், சர்ச்சைகளும்...!

ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைகளின் தலைவி என்றாகி விட்டார். இவரை சுற்றி சர்ச்சைகளும், பிரச் சினைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
ஸ்ரீரெட்டியும், சர்ச்சைகளும்...!
Published on

சின்ன நடிகர்களில் இருந்து பிரபல கதாநாயகர்கள் வரை, சின்ன டைரக்டர்களில் இருந்து பிரபல டைரக்டர்கள் வரை இவருடைய புகாரில் பலர் சிக்கியிருக்கிறார்கள்.

இவர் ஆரம்ப காலத்தில், ஆந்திராவில் தங்கியிருந்தார். தெலுங்கு கலைஞர்களிடம் இருந்து தனது `செக்ஸ்' புகார்களை சொல்ல ஆரம்பித்தார். இதனால் ஸ்ரீரெட்டியின் பெயரை சொன்னாலே தெலுங்கு கலைஞர்கள் ஓட ஆரம்பித்தார்கள். இந்த ஓட்டத்தை பார்த்து ஸ்ரீரெட்டி ரசித்தார். அவர் ரொம்ப நாட்கள் ஆந்திராவில் சிரித்த முகமாக இருக்க முடியவில்லை. அவருக்கு பல மிரட்டல்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து அவர், ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஆந்திராவில் செய்த வேலைகளை அவர் சென்னையிலும் தொடர்ந்தார். பிரபல கதாநாயகர்கள், நட்சத்திர அந்தஸ்துள்ள டைரக்டர்கள் மீது `செக்ஸ்' புகார்களை கூறினார். பல குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விட்டார்.

இந்த நிலையில், ``ஸ்ரீரெட்டியை வைத்து ஒரு படம் செய்வதற்கு நான் தயார்'' என்று ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவர் மறுபடியும் இதுபற்றி வாயை திறக்கவில்லை. ஸ்ரீரெட்டி உள்பட அவரை சார்ந்தவர்கள் கேள்வி கேட்கவும் இல்லை!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com