மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த ஸ்ரீ திவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரீ திவ்யா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க இருக்கிறார்.
மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த ஸ்ரீ திவ்யா
Published on

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து வெள்ளக்கார துரை, காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளக்கார துரை படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக டைகர் என்னும் படத்தில் இணைந்திருக்கிறார் திவ்யா. இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா கதை வசனம் எழுத இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com