

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-8-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-8-1996 அன்றைய தேதிக்கு முன்பாகவோ 1-8-2005-க்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, டைப்பிங் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-6-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.