சேலத்தில் மாநில கராத்தே போட்டி; 450 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

450 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சேலத்தில் மாநில கராத்தே போட்டி; 450 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Published on

புதோகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை கராத்தே பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் கெபிராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 17 மாவட்டங்களில் இருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கராத்தே போட்டி 8 வயதுக்கு உட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 மற்றும் 14, 18 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் ராமன், மணிகண்டன், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com