

என் கனவு நனவானதாக கருதுகிறேன். இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது. இலக்குகளை அடைய வேண்டியிருக்கிறது.
2016-ல் வெளியான தள்ளிப்போகாதே... பாடல் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது, மிகுந்த மனநிறைவை தந்தது. என் முதல் குரு, அம்மாதான். அவர்களிடம் மூன்று வயதில் இருந்தே இசை கற்று வருகிறேன். என் அம்மா வழி தாத்தா ராஜகோபாலனும் ஒரு இசை கலைஞர்தான்.
நான் இதுவரை ரஜினிகாந்த், விஜய், அஜித், விஜய் சேதுபதி ஆகியோருக்காக பாடியிருக்கிறேன். கமல்ஹாசனுக்கு பாடும் வாய்பை எதிர்நோக்கி இருக்கிறேன் என்கிறார், சித் ஸ்ரீராம்!