கேரள மாநில செயலாளர் படுகொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

கேரள மாநில செயலாளர் படுகொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரள மாநில செயலாளர் படுகொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்தும், கொலையில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கேரள அரசு கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை அண்ணாசாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மண்டல செயலாளர் ரசீத் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், மாநில செயலாளர் ஏ.கே.கரீம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com