ஈரோட்டில் கால்டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்- வாடகை கட்டணத்தை உயர்த்தக்கோரி நடந்தது

ஈரோட்டில் கால்டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்- வாடகை கட்டணத்தை உயர்த்தக்கோரி நடந்தது
ஈரோட்டில் கால்டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்- வாடகை கட்டணத்தை உயர்த்தக்கோரி நடந்தது
Published on

ஈரோடு

வாடகை கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கக்கோரி கால்டாக்சி டிரைவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையொட்டி கால்டாக்சி கார்கள் பெரியார் நகர் 80 அடி சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து தனியார் நிறுவன கால்டாக்சி டிரைவர் ஒருவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி உயர்ந்து உள்ளது. வாகன உதிரிபாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. ஆனால் தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வாடகை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தற்போது 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.95 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலையை ரூ.110 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல் கால்டாக்சி டிரைவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் விபத்து காப்பீடு செய்து கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் 400 கால்டாக்சிகள் ஓடுகிறது. இதில் சுமார் 100 கால்டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com