பா.ஜ.க.வினர் சங்கு ஊதி போராட்டம்

பா.ஜ.க.வினர் சங்கு ஊதி போராட்டம்
பா.ஜ.க.வினர் சங்கு ஊதி போராட்டம்
Published on

திருச்சி,மார்ச்.29-
திருச்சி மாநகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட காந்திமார்க்கெட் ரெட்டை வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நேற்று காலை பா.ஜ.க.வினர் சங்கு ஊதி மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். மாநகர்மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டு, சங்கு ஊதி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் ரவியிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். இதையொட்டி அங்கு பாலக்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com