

திருப்பத்தூர்,
மதுரையில் இருந்து காரைக்குடிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று திருப்பத்தூர் பஸ் நிலையம் வந்தது. அப்போது திருப்பத்தூரில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பயணிகளை பஸ் கண்டக்டர், இடையில் நிற்காது என கூறி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதோடு சில நிறுத்தங்களில் பஸ் நிற்காது என்று கூறி பஸ் புறப்படும் போது ஏறி கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதை கண்டித்து பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற கோகிலாராணிநாராயணன், திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் பச்சுவார்த்த நடத்தினர். அதன்பின்னர் பயணிகள் கலைந்து சென்றனர். பஸ்சில் பயணிகளை ஏற்ற மறுப்பது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.