கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் 300 பேர் கைது

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஆவின் நிறுவனம் வழங்க வேண்டிய பால் பண பாக்கியை முழுவதுமாக தரவேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று கோட்டையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.
கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் 300 பேர் கைது
Published on

சென்னை,

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போலீசார் தடுப்பு வேலி அமைத்து கோட்டையை முற்றுகையிட முயற்சித்த பால் உற்பத்தியாளர்கள் 300 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதையடுத்து அரசு தரப்பில் இருந்து பால் உற்பத்தியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தனர்.

அதன்படி, பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஏ.எம்.முனுசாமி, பொதுச்செயலாளர் கே.முகமது அலி உள்பட 4 பேரிடம், பால்வளத்துறை செயலாளர் கோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com